இலங்கையர்கள் என நம்பப்படும் சுமார் 200 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
200 பேரை ஏற்றிவந்த படகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதென கிழக்கு அவுஸ்திரேலிய பொலிஸ் கமிஸ்னர் கார்ல் ஓ´கல்லஹான் (Karl O’Callaghan) தெரிவித்துள்ளார்.
இதுவரை 40 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக நபர்களை ஏற்றிவந்ததால் படகு கவிழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.