நாளை 02-08-2012 வேலணைத்துறையூர் தாழையம்பதி சிறீ சிவசுப்பிரமணியசுவாமி கோவில் ஆடிவேல் தீர்த்தோற்சவம்.
உப்பு காற்றிலும் உன் வாசம்
கடல் அலை ஒலித்திடும் உன் நாமம்
நெருங்கும் அடியவர் திருக்கூட்டம்
உன் விழி அருள் சேர்ந்திட வினையோடும்
வேலணையூரில் விளங்கும் அழகே
புலவர் தேடும் இனிய தமிழே
ஆடிவேல் தாங்கி அழகென வருக
அடியவர் நெஞ்சில் அருளென நிறைக.
வேலணையூர்-தாஸ்