அப்பிளின் அனைத்து ஐபேட்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது விலை குறைந்த சிறிய ஐபேட் ஒன்றினை வெளியிட அப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஐபேட் மினி என பெயரிப்படலாம் எனவும், இந்தாண்டின் இறுதியில் இந்த ஐபேட் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அங்குலத்திரை 7அல்லது 8ஆக இருக்குமெனவும், 9.7 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டிருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரெட்டினாக்கு பதிலாக சார்ப் நிறுவனத்தின் டிஸ்ப்ளே உபயோகப்படுத்தப்படலாம். ஐபேட் மினியின் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சந்தையில் குறைந்த விலை அண்ட்ராய்ட் டேப்லட்களின் ஆதிக்கத்தினைக் குறைக்கும் பொருட்டே இதனை அப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னரே கூகுள் தனது குறைந்த விலை முதல் டேப்லட்டான நெக்சஸ் 7ஐ அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.