ஐ.சி.சியின் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலாமிடத்தை இங்கிலாந்து அணி தக்க வைத்துக்கொண்டுள்ளது. அவுஜ்திரேலியா இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
இதுவரை மூன்றாமிடத்தில் இருந்துவந்த, அவுஸ்திரேலிய அணி 116 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இரண்டாமிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
சிறிலங்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1 க்கு 0 என்ற கணக்கில் தொடரை இழந்த போதிலும் மேலும் புள்ளிகளைப் பெற்று இந்திய அணியை ஐந்தாமிடத்திற்கு பின் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Kirush Shoban