“புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ”
அது தான் அவங்க சொன்ன ஒற்றைவரி.
நான் நம்பவில்லை !!
உங்கள் அணுகலில் கதையில் 
உண்மைக்காதல் உருகி வழிகிறதாம் 
தெளிவும் அமைதியும் அவர்களுக்கு பிடித்திருந்ததாம்
இதற்கெல்லாம் மேல்
மதமும் ஜாதியும் நமக்கு ஒன்று என்னும்
உண்மைகூட ஒளிந்திருக்கிறது இனியன்.
இனியன் மகிழ்வின் விளிம்பிற்கு வழுக்கினான்.
அவனுடைய கரங்கள்
சட்டென்று சிறகுகளானதாய் உணர்ந்தான் 
இரத்த அணுக்களின் அத்தனை துணுக்கிலும்
சந்தோஷ மின்னல் ஒன்று
சத்தமின்றி முத்தமிட்டுக் கொண்டது !!  
சுடர்ர்ர்ர்..
உதடுகளோடு சேர்ந்து அவன் கண்களும்
சந்தோஷத்தில் கத்தின !!!
சுடர் சிரித்தாள்
சமுத்திரத்தின் பாதியையே 
நீந்தி கடந்ததாய் 
உணர்ந்தான் அவன் 
இரத்தத்தில் புது அணுக்கள் பிறந்ததாய்
அவனைச் சுற்றி
ஆக்சிஜன் மட்டுமே அடைபட்டுக்கிடப்பதாய்.
உலக உருண்டையை உள்ளங்கைக்குள்
சிறைப்பிடித்ததாய்.
ஏதேதோ உணர்வுகள்.
பல தேர்வுகளில் வென்றிருக்கிறான்
ஆனால்
இப்போதுதான்
தேர்வாளர்களையே வென்றதாய் மகிழ்கிறான்.
காதல்
உடலின் எல்லா உணர்வுகளுக்கும் உறவா ?
காதல் வந்தவுடன்
நட்பை நாம் பாதித்து விடுவோமோ 
என்று தவிக்கிறது காதல் 
தன்னையே தியாகம் செய்ய 
துடிக்கிறது காதல் 
என்பதையே அவள் மூலம்
உணர்ந்தான் அவன் 
சுடர் உன் முடிவு 
என்ன ?
கேட்டான் அவளிடம் 
அவள் பதில்……………
                                                                                     பார்த்தியின் பதிவு தொடரும்…..

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *