இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக வெல்லும் பட்சத்தில், ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் மீண்டும் “நம்பர்1’ இடத்தைப் பிடிக்கலாம். இந்திய அணி 05 என தொடரை இழந்தால் 5 ஆவது இடத்துக்கு தள்ளப்படும். இலங்கை அணி நான்காவது இடத்துக்கு முன்னேறும்.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா (119), தென்னாபிரிக்கா (118), இங்கிலாந்து 118) அணிகள் “முதல்3’ வரிசையில் உள்ளன. இப்பட்டியல் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று அம்பாந்தோட்டையில் நடக்கவுள்ளது. இத்தொடரை இந்திய அணி 50 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், 120 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கலாம். கடைசியாக 2009 செப்டெம்பர் மாதம் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறலாம்.
ஒருவேளை இந்திய அணி 05 என தொடரை இழந்தால் 112 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்துக்குத் தள்ளப்படும். இலங்கை அணி 116 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறும்.
சமீபத்தில் இங்கிலாந்திடம் (40) ஒருநாள் தொடரை மோசமாக இழந்ததால் அவுஸ்திரேலிய அணியின் முதலிடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியகப்டன் தோனி கூறுகையில்;
“இலங்கைத் தொடர் மிகவும் சவாலானது. “களத்தடுப்பு உள்ளிட்ட சில துறைகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பதை இத்தொடரின் முடிவில் அறிந்து கொள்ளலாம். தற்போது 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். “ருவென்ரி20’ உலகக் கிண்ணம் பற்றி சிந்திக்கவில்லை. வீரர்களின் உடற்தகுதி சிறப்பாகவுள்ளது. திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்’ என்றார்.
