இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே கடைசியாக 2007ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் நடந்தது. அதன் பின்னர் தீவிரவாதிகள் தாக்குதலால் போட்டிகள் நடத்தப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு அனுமதி வழங்கினால் தான் கிரிக்கெட் போட்டி நடத்த முடியும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் இந்தியா & பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில் மத்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், இந்தியா & பாகிஸ்தான் நாடுகளிடையே கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்குவது தொடர்பாக இருநாட்டு வாரியங்கள் தான் முடிவு செய்யவேண் டும். எங்களின் கூட்டறிக் கையில் இரு நாடுகளுக்கு இடையிலான விளை யாட்டு போட்டி உறவு கள் மேம் படுத்த வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
