இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இலங்கையுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. ஜூலை 22-ந்தேதி முதல் ஆகஸ்ட் 7-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
இந்தப் போட்டிக்கான இந்திய அணி ஜூலை முதல் வாரத்தில் தேர்வு செய்யப்படும். அதோடு செப்டம்பர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்திய அணியில் ஷேவாக் மீண்டும் இடம் பெறுகிறார். இந்திய அணி கடைசியாக விளையாடிய ஆசிய கோப்பை போட்டி யில் ஷேவாக்குக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பயணத்தில் டோனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷேவாக் நீக்கப்பட்டார். ஆனால் தேர்வு குழுவினர் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.
சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ஷேவாக்கின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால் ஷேவாக் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுகிறார். அவர் ஐ.பி.எல். போட்டியில் 16 ஆட்டத்தில் 495 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 5 அரை சதம் அடித்து முத்திரை பதித்தார்.