மகராஷ்டிரா, மணிப்பூர், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 92 விளையாட்டு வீரர்கள் இம்மாதம் 24-ந்தேதி சுவீடன் சென்றனர். டேபிள் விளையாட்டிப் போட்டிகளுக்காக சென்ற இவர்களை விளையாட்டு ஏஜெண்டுகள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்க ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த ஓட்டலுக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த தொகையையும் கொடுக்காமல் பாதி தொகையை மட்டுமே ஏஜெண்டுகள் கொடுத்துள்ளனர். இதனால் அவர்களை அங்கிருந்து வெளியேற ஓட்டல் நிர்வாகம் மறுத்தது.
இதுகுறித்து இந்திய தூதரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஓட்டல் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் வீரர்கள் ஒவ்வொருவரின் தங்கும் செலவை செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் கோரிக்கையின்படி ஒவ்வொரு வீரருக்கும் 300 யூரோ அதாவது ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த இந்திய தூதரகம் சம்மதித்தது. அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர 58 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு இன்று சுவீடன் புறப்பட்டு சென்றுள்ளது.