இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அதிரடி வீரர் சேவாக் 250 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்ற மைல்கல்லை கடக்கவுள்ளார். அதேபோல் சுரேஷ் ரெய்னா மற்றும் சகீர்கான் ஆகியோரும் மைல்கல்களை கடக்கவுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த 5 போட்டிகளிலும் இந்திய அதிரடி தொடக்க
இதுவரை 245 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சேவாக் 104.68 ஸ்ட்ரைக் ரேட் உடன் 8090 ஓட்டங்களை அடித்துள்ளார். சராசரியாக 35.17 ஓட்டங்கள்.
கடந்த மார்ச்சில் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் சேவாக் காயம் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டார். அதன்பிறகு ஐ.பி.எல். 5 தொடரில் சிறப்பாக ஆடிய சேவாக் இலங்கைக்கெதிரான போட்டிகளிலும், சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவாக் 250 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர் என்ற மைல்கல்லை கடப்பதன் மூலம், இந்திய வீரர்களில் அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர்களின் பட்டியலில் 7 ஆவது இடத்தைப் பிடிப்பார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் மாஸ்டர் பட்ஸ்மேன் சச்சின் (463 போட்டிகள்) உள்ளார்.
இப்பட்டியலின் 2 ஆவது இடத்தில் ராகுல் ட்ராவிட் (340 போட்டிகள்), அதன் பிறகு அசாருதீன் (334), சவுரவ் கங்குலி (308 போட்டிகள்), யுவராஜ் சிங் (271 போட்டிகள்), அனில் கும்ளே (269 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர். சவர்தேச அளவில் அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர்களின் பட்டியலிலும் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல இலங்கை ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் சகீர்கான் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற மைல்கல்லை கடப்பார். மேலும் இடது துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா 4 போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 150 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர் என்ற மைல்கல்லை கடப்பார்.
Kirush Shoban