இலங்கையில் மீட்கப்பட்ட புராதன மனிதனின் எழும்புக் கூடுகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தாம் விரும்பம் கொண்டுள்ளதாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளின் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் அவர்கள் இலங்கைக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கைகளையும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் முதன்முதலாக இவ்வாறான புராதன ஹோமோ சேப்பியன் மனித வர்க்கத்தின் எழும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை உலகம் முழுவதும் செய்தியாக பரவியுள்ளமை உலகின் முன்னணி மனித தொல்பொருள் நிபுணர்கள் மத்தியில் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூட்டை சேதமடையாமல் வெளியில் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனை ஆராய்வதற்கு தேவையான அறிவு மற்றும் தொழினுட்ப
வசதிகள் இலங்கையிடம் இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்றில் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக எந்தநாட்டின் நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும்அது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் தொல்பொருள் ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.