இலங்கை அணி இந்த வருடத்தில் 13 டெஸ்ட் போட்டிகளிலும், 26 ஒருநாள் போட்டிகளிலும் 20க்கு 20 போட்டிகள் ஐந்திலும் விளையாட உள்ளது.அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இலங்கை அணி இந்த வருடம் சுற்றுப் பயணம் செய்ய உள்ள அதேவேளை இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாட்டு அணிகள் இங்கு வர உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,இலங்கை அணி இந்த வருடத்தில் உள்ளூரில் 10 டெஸ்ட்களிலும் 13 ஒருநாள் போட்டிகளிலும் 20க்கு 20 போட்டிகள் 5 இலும் பங்கேற்கும். வெளிநாடுகளில் 3 டெஸ்ட்களிலும் 13 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கும்.
2013 அட்டவணைப்படி 10 டெஸ்ட்களிலம் 21 ஒருநாள் போட்டிகளிலும் 20க்கு 20 6 போட்டிகளிலும் இலங்கை அணி பங்கேற்கும். 2014 இல் 7 டெஸ்ட் 15 ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டிகள் 2ல் இலங்கை பங்கேற்கும்.2012ல் விளையாட்டு அமைச்சிற்கு 10 கோடி 82 இலட்சத்து 28,965 ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் சபையின் மாதாந்த வருமானம் 89,778,142 ரூபா வாகும்.
7 வருடங்களின் பின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தேர்தல் நடத்தப்பட்டது. 2 தரப்பினர் போட்டியிட்டனர். 148 பேருக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இறுதி நேரத்திலே ஒரு தரப்பு விலகியது. தேர்தல் சுயாதீனமாகவே நடந்தது. எந்த விளையாட்டுக் கழகமும் தேர்தலில் முறைகேடு நடந்ததாக முறையிடவில்லை.ஸ்ரீலங்கா கிரிக்கெட் குழுவினால் சுற்றுப்பயணம் செய்யப்படவுள்ள நாடுகள் வெளிநாட்டுக் கிரிக்கெட் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நாட்டிற்கு வருவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நாடுகள்
2012 அவுஸ்திரேலியா பங்களாதேஷ் இந்தியா இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியுசிலாந்து
2013 பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா
2014 இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் இங்கிலாந்து
