இலங்கை
பெண்களின் சராசரி உயரம் 5 அடி 11 அங்குலம். பொதுவாக 5-6 அடிக்கு இடைப்பட்ட உயரத்திலேயே இருக்கிறார்கள் நம் பெண்கள். இந்த உயரத்துக்கு ஏற்ப உடை அணிந்தால் அழகு மிளிரும் அப்படி இருக்க எல்லோருக்கும் ஆசை அல்லவா இதை வாசித்து பாருங்கள்
இலியானா போன்றவர்களே…
ஒல்லியாக இருப்பதால் சாதாரணமாகவே உயரமாகத் தோன்றுவீர்கள். நீங்கள் நேர்கோடிட்ட, முழுநீள கையுள்ள உடைகள் அணியலாம்.
சுடிதார் அணியும்போது கோடிட்ட பேன்ட் மற்றும் பிளைன் டாப் அணிந்தால் அழகாக இருக்கும்.
கால்களின் நீளத்தை எடுத்துக்காட்ட முக்கால் பேன்ட் அணியலாம். அதிக ஹீல்ஸ் இல்லாத காலணி நல்லது. சில உடைகளுக்கு ஹீல்ஸ் அணிந்தால்தான் அழகாக இருக்கும். அப்போது மீடியம் ஹீல்ஸ் காலணிகளை அணியலாம்.
புடவை கட்டும்போது, தொப்புளுக்குக் கீழ் அல்லாமல், அதே நேரம் இடுப்பு வளைவை எடுத்துக்காட்டுவது போல அணியலாம். பெரிய பார்டர் உள்ள பட்டுப் புடவை அணிந்தால் மேலும் உயரமாகக் காட்டும். மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, வயலெட் நிறங்களை தவிர்க்க வேண்டும்.
கன்சிகா போன்றவர்களே…
உயரமாக இருந்தாலும் பருமன் காரணமாக குள்ளமாகத்தான் தோன்றுவீர்கள். நீங்கள் குறுக்குகோடிட்ட உடைகளை அணியலாம். அடர்த்தியான நிறங்கள் உங்களை ஒல்லியாகவும் உயரமாகவும் காட்டும்.
குட்டை கை வைத்த நீள டாப் அணியலாம். லோ ஹிப் புடவையோடு, ஹீல்ஸ் வைத்த காலணி அணிந்தால் அழகாக இருக்கும்.
பெரிய பூ டிசைன் உடைகளை தவிர்க்க வேண்டும்.
துசி குமாரசாமி
வவுனியா