கொழும்புத்துறை உதயபுரம், புனிதபுரம் ஆகிய பகுதிகளில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
35 வருட காலமாக அரச காணியில் வாழ்விடங்களை அமைத்து வசித்து வரும் மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்க பெற்ற போதிலும், இக்கிராம மக்கள் வீட்டு திட்டங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
90 குடும்பங்கள் வாழும் இவ்விரு கிராமங்களையும் எந்த அதிகாரிகளும் பார்வையிட்டு தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையெனக் கூறும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமக்கு உதவ முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.