கொண்டல் காற்று கொண்டு வரும்
குளிர் போல்
என் கனவுகள் சந்தோசங்கள் கவிதைகள்
எல்லாவற்றையும்
அள்ளி வருகிறாய்
ஒளியாய் இறங்கி
உன் முகஅழகை
அள்ள நினைக்கிறது நிலவு
கன்னக்கூந்தல் அலைகிறது
கலவரப்படுகிறத காற்று
விழி வலையில் தானே
ஏறியிருக்கிறதென் உயிர்
காதல் நிறைந்து
கண்களில் பார்வையாய் வழிகிறது
மெல்லினங்களை ஏற்றி வருகிறது வார்த்தை
எல்லாம் ஆகி உன்னுள் என்னை நிறைக்கிறாய்
கனவுகள் உன்னிடம் வர்ணம் கேட்டு வந்தபோது
மீண்டும் புறப்படுகிறாய்
உனக்கு முன் போயிருக்கிறதென் மனசு.
-வேலணையூர்-தாஸ்-