நிசப்தமான இரவுகளில்
உன்ஞாபகங்கள்
மட்டும்
விடிவெள்ளியாய்
எனக்குள் விடியலாக
நாம்
பேசி சிரித்ததைவிட
அடிக்கடி சண்டைபோட்டு
பிரிந்தது தான்
நமக்குள் அதிகம்
கோபத்தில்
உன்னோடு பேசமுடியாது
என கத்திவிட்டு
சில நிமிடங்களில்
உனை தொலைபேசியில் அழைத்து
இன்னும் கோபமாகத்தான்
என்று சொல்லிகொள்வது
நானும் எனது காதலும்தான்
எனக்கு மட்டும்
சொந்தமான உன்னையும்
உன் பெயரையும்
யாராவது
உரிமையாய் உச்சரித்தால் கூட
அவர்களோடு
சண்டை போடுவது
நானும் எனது காதலும்தான்
எதாவது
நீ செய்யும் போது
எதுக்கு இது
எதுக்கு நீ இதை பண்ணனும்
என்று உன்னை திணறவிட்டு
எதனாலும்
நீயே செய் என பொறுப்பை
என் தலையில் கட்டிவிட்டு
கோபமாய் இருக்கும்
நீயும் உன் காதலும்
நமக்குள்
முளைக்கும் சண்டையில்
கோபமாகி அழும்
என்னை
சமாதானபடுத்த முயன்று
தோற்று கடைசியில்
நீ
பொண்டாட்டி ஜ லவ் யு
சொல்லும் போது மட்டும்
எங்கு போய் ஒளிந்துகொள்கிறதோ
தெரியவில்லை
கோபமும் அழுகையும்
என் பாடக்கொப்பி
முழுவதும்
உன் பெயரை
என் பெயரோடு சேர்த்தெழுதி
படிப்பதை மறந்ததை
உனக்கு சொல்லி சிரிக்கும் என்னை
காதலோடு ரசிக்கும்
உன் பார்வைகளால்
நிசப்பதமாய் நிள்கிறது
உன் நினைவுகள் ……