கியூ தாவரவியற் பூங்கா உலகின் மிகப் பெரிய தாவரவியல் உள்ளடக்கங்களைக் கொண்ட பூங்காவாகும்.
இது இங்கிலாந்தின் சுரே பிரதேசத்தில் அமைந்துள்ள கியூ கார்டன் என்றழைக்கப்படும் அரச தாவரவியற் பூங்காவாகும்.
சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள இப்பூங்கா, தேம்ஸ் நதியோரத்தில் ரிச்மண்ட், கியூ ஆகிய ஊர்களுக்கிடையே அமைந்திருக்கின்றது.
