லண்டனில் உள்ள புகழ்பெற்ற “பிக் பென்” கடிகாரக் கோபுரத்திற்கு இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த ஆண்டு முழுவதும், பிரிட்டனில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இவரை கௌரவபடுத்தும் விதத்தில், லண்டனில் பார்லிமென்டையொட்டி அமைந்துள்ள வரலாற்று புகழ்மிக்க, “பிக் பென்” கடிகாரக் கோபுரத்துக்கு எலிசபெத் கோபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்ற நடவடிக்கையை பிரிட்டன் பார்லிமென்ட் வரவேற்றுள்ளது. புகழ்பெற்ற இந்த கோபுரம், கடந்த 1859ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கோபுரத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மணியின் ஓசை லண்டனின் சில கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.