அண்மையில் கூகிள் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்தது யாவரும் அறிந்த விடயமாகும். அதனால் சற்று ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக்கிற்கு மேலும் கவலையளிக்கும் வகையில் நாங்களும் சளைத்தவர்கலல்ல என மைக்ரோசொப்ட் நிறுவனமும் ஓர் சமூக வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இது மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும் சில வாரங்களுக்கு முன் அத்தளம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இச்சமூக வலையமைப்பின் பெயர் “டுலாலிப்” ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அப்பக்கத்தில் “With Tulaip you can find what you need and share what you know easier than ever” எனக்குறிப்பிடப்பட்டுள்ளமையாகும்.

பின்னர் இப்பக்கம் அத்தளத்திலிருந்து அகற்றப்பட்டு வேறோர் பக்கம் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

microsoft social network
microsoft social network

அத்தோடு www.social.com தளம் மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் கொள்வனவும் செய்யப்பட்டுள்ளதுடன்
மேலும் இது மைக்ரோசொப்டின் சமூகவலையமைப்பு என்பதினை உறுதி செய்யும் பல ஆதாரங்கள் உள்ளதாக இணையத்தளங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதாவது இதன் பெயர் “Tulalip” என்பது அமெரிக்க வொசிங்டனின் ரெட்மொண்ட் நகரின் பூர்வீகக் பழங்குடியினரைக் குறிக்கும் பெயர் எனவும் இங்கேயே மைக்ரோசொப்ட்டின் தலைமையகமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைக்ரோசொப்டின் தேடல் பொறியான bing நான்கு எழுத்துக்களை கொண்டதுடன் தற்போது அது socl.com தளமும் 4 எழுத்துக்களை கொண்டதாகும்.
சமூக வலையமைப்புகளுக்கிடையிலான போட்டியில் பேஸ்புக் ஏற்கனவே ஜாம்பவானாக உள்ள நிலையில் கூகுள் தனது கூகுள் + ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மைக்ரோசொப்டின் இரகசிய முயற்சியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *