மனிதன் இரும்பைப் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தைச் சேர்ந்த பெருமளவிலான நாணயங்கள் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் இருக்கும் ஜெர்ஸி தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக் காலத்தைச் சேர்ந்த நாணயங்கள் ஐரோப்பாவில் இதற்கு முன் இந்த அளவுக்கு கண்டெடுக்கப்பட்டதில்லை .

ரோமானிய மற்றும் கெல்டிக் காலப் பகுதிகளைச் சேர்ந்த இந்த நாணயங்கள் இரண்டாயிரம் வருடத்துக்கும் பழமையானவை.

உலோகங்களை கண்டறியும் கருவிகள் மூலம் இரு ஆடவர்களால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விவசாயியால் வெள்ளி நாணயங்கள் தோண்டி எடுக்கப்பட்டன என்று தகவல்கள் பரவியதை அடுத்து, இந்த இருவரும் அப்பகுதியில் உலோகங்களை கண்டறியும் கருவிகள் மூலம் தேடுதல்களை நடத்திவந்தனர்.

ஜெர்ஸி தீவுப் பகுதியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருமளவிலான இரும்புக் காலத்து நாணயங்களின் மதிப்பு பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கக் கூடும் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எனினும் இவற்றின் மதிப்பைக் கண்டறிய பல மாதங்கள் ஆகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *