சேரும் முகவரி சரியில்லை
அனுப்பிய முகவரி அதில் இல்லை!
ஒரு கடிதம்
அனாதையாகி விட்டது….
ஒரு கடிதம்
அனாதையாகி விட்டது….

பற்பல ஊர்திகளின்
முத்திரை பதிந்து
பற்பல தெருக்களில்
விசாரணை நடந்தது
பற்பல தினங்கள்
பறந்து கடந்தது!

பிறந்த இடத்தின்
பெயரே இல்லை
புகுந்த இடமோ
புரிய வில்லை.

அந்தக்
கடிதத்தை-
அஞ்சல் நிலையங்கள்
ஆராய்ச்சி செய்தன.

ஒட்டியிருந்த
உறையின் உள்ளே
இருந்த தாளில்-
எழுதியிருந்தது
இப்படி:
ஒரு வாரத்திற்குள்
உங்கள்
பதில் வரவேண்டும்
இல்லாவிட்டால்
உயிர்ப்பறவை சிறகடிக்கும்
கடைசி முத்தமிட என்
கல்லறைக்கு வரலாம்”

By thanaa

One thought on “ஒரு கடிதம் அநாதை ஆகிவிட்டது….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *