சென்னை, : தமிழில் ‘ஆயுத எழுத்து’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘7ஆம் அறிவு’ மற்றும் இந்தியில் ‘ப்ளாக்’, ‘மை நேம் இஸ் கான்’, ‘கஜினி’, ‘அஞ்சானா அஞ்சானி’ உட்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி.கே.சந்திரன். ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாகும் வரிசையில் இவரும் இப்போது இயக்குனராகிறார். இவர் இயக்கும் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படங்களை தயாரித்த ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி உட்பட முன்னணி டெக்னீஷியன்கள் பணியாற்றுகின்றனர்.
