‘கனவில் வந்த சிவபெருமான் அடுத்த ஆதீனம் இவர்தான் என்று சொன்னார்’ என மதுரையில் ஞானசம்பந்தர் ஸ்தாபித்த மடத்தின் மூத்த ஆதீனம் விடுத்த ஸ்டேட்மென்ட்டைக் கேட்டதும், நம்மில் பலர்
ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம். ‘என்னடா, இவர்களுக்கெல்லாம் கனவில் சிவபெருமான், குறித்த நேரத்தில் சீரியலில் வருவதுபோல், தவறாது வருகிறாரே… நமக்கெல்லாம் சிவன் கூட வேண்டாம்..
அவர் மகன் பிள்ளையார்…அவரும் வேண்டாம், அவர் ஏறிப்போகும் எலிகூட வருவதில்லையே!’ என்று சிலர் அங்கலாய்த்ததாக கேள்வி.
என் கனவுகள் படுமோசம். சில நாட்களுக்கு முன்பு மதுரை கம்பன் விழாவில் பேசுவதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து மதுரை போனேன். புகைவண்டித் தூக்கம் என்பது சில
கொடுத்து வைத்த மஹானுபாவர்களுக்கு மட்டும்தான். வண்டி எழும்பூரைத் தாண்டும் முன் நித்திராதேவி அவர்களை அன்போடு தழுவிக்கொள்வாள். என்னோடு மட்டும் சண்டைக்கு நிற்பாள். இறுதியில்
லேசாகக் கண் அயர்ந்தேன். அப்போது வந்த கனவு என்ன? ஒரு முடியாத தோசையைத் தின்றுகொண்டே, போக வேண்டிய ரயிலைத் தவறவிட்டு அதன் பின்னே வீராவேசத்தோடு நான் ஓடிக் கீழே விழும் கனவு. கூடவே ‘படக், படக்’ என்று, டிஜிட்டல் சவுண்ட் டிராக்கில் பின்னணி இசையாக ரயில் வண்டியின் தாள லயம் வேறு! கஷ்டம்டா சாமி.
சிவபெருமான் கனவில் வந்த சம்பவங்களில் நமக்கு ஆன்மச் சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் சரித்திரத்தில் உண்டு. ஔரங்கசீப் இந்தியாவை ஆண்ட காலத்தில் காசியின் பிரசித்தி பெற்ற
விஸ்வநாதர் ஆலயம் ஐந்து முறை இடிக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘வடக்கில் கோயில் இல்லாவிட்டாலும்
தென்காசியில் எனக்குக் கோயில் எழுப்பு’ என்று கட்டளையிட, அப்படி பராக்கிரம பாண்டியன் எழுப்பியதுதான் தென்காசியின் பிரமாண்டமான கோயில். அந்தக் கோயிலில் மன்னர் செதுக்கிச்
சென்றிருக்கும் ஒரு வாசகம், ‘ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கோயிலின் கல் ஒன்று கீழே விழுந்து அதை எடுத்துக் கட்டும் திருப்பணியை எந்த அன்பர் செய்யப் போகிறாரோ அவரின் கால்களில்
விழுந்து இப்போதே நான் பணிகிறேன்.’ ஐரோப்பிய அரசர்கள் தங்கள் பெரும் மாளிகைகளை தங்கத்தில் இழைத்துக் கட்டிக் கொண்ட கால கட்டத்தில் நம் தேசத்தின் மன்னர்கள் கோயில்களை பெரும் கனவு என்னும் சுவாரஸ்யம்
கருத்துகள்
12:31:03Wednesday2012-06-06
‘கனவில் வந்த சிவபெருமான் அடுத்த ஆதீனம் இவர்தான் என்று சொன்னார்’ என மதுரையில் ஞானசம்பந்தர் ஸ்தாபித்த மடத்தின் மூத்த ஆதீனம் விடுத்த ஸ்டேட்மென்ட்டைக் கேட்டதும், நம்மில் பலர்
ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம். ‘என்னடா, இவர்களுக்கெல்லாம் கனவில் சிவபெருமான், குறித்த நேரத்தில் சீரியலில் வருவதுபோல், தவறாது வருகிறாரே… நமக்கெல்லாம் சிவன் கூட வேண்டாம்..
அவர் மகன் பிள்ளையார்…அவரும் வேண்டாம், அவர் ஏறிப்போகும் எலிகூட வருவதில்லையே!’ என்று சிலர் அங்கலாய்த்ததாக கேள்வி.
என் கனவுகள் படுமோசம். சில நாட்களுக்கு முன்பு மதுரை கம்பன் விழாவில் பேசுவதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து மதுரை போனேன். புகைவண்டித் தூக்கம் என்பது சில
கொடுத்து வைத்த மஹானுபாவர்களுக்கு மட்டும்தான். வண்டி எழும்பூரைத் தாண்டும் முன் நித்திராதேவி அவர்களை அன்போடு தழுவிக்கொள்வாள். என்னோடு மட்டும் சண்டைக்கு நிற்பாள். இறுதியில்
லேசாகக் கண் அயர்ந்தேன். அப்போது வந்த கனவு என்ன? ஒரு முடியாத தோசையைத் தின்றுகொண்டே, போக வேண்டிய ரயிலைத் தவறவிட்டு அதன் பின்னே வீராவேசத்தோடு நான் ஓடிக் கீழே விழும்
கனவு. கூடவே ‘படக், படக்’ என்று, டிஜிட்டல் சவுண்ட் டிராக்கில் பின்னணி இசையாக ரயில் வண்டியின் தாள லயம் வேறு! கஷ்டம்டா சாமி.
சிவபெருமான் கனவில் வந்த சம்பவங்களில் நமக்கு ஆன்மச் சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் சரித்திரத்தில் உண்டு. ஔரங்கசீப் இந்தியாவை ஆண்ட காலத்தில் காசியின் பிரசித்தி பெற்ற
விஸ்வநாதர் ஆலயம் ஐந்து முறை இடிக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘வடக்கில் கோயில் இல்லாவிட்டாலும்
தென்காசியில் எனக்குக் கோயில் எழுப்பு’ என்று கட்டளையிட, அப்படி பராக்கிரம பாண்டியன் எழுப்பியதுதான் தென்காசியின் பிரமாண்டமான கோயில். அந்தக் கோயிலில் மன்னர் செதுக்கிச்
சென்றிருக்கும் ஒரு வாசகம், ‘ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கோயிலின் கல் ஒன்று கீழே விழுந்து அதை எடுத்துக் கட்டும் திருப்பணியை எந்த அன்பர் செய்யப் போகிறாரோ அவரின் கால்களில்
விழுந்து இப்போதே நான் பணிகிறேன்.’ ஐரோப்பிய அரசர்கள் தங்கள் பெரும் மாளிகைகளை தங்கத்தில் இழைத்துக் கட்டிக் கொண்ட கால கட்டத்தில் நம் தேசத்தின் மன்னர்கள் கோயில்களை பெரும்
செலவில் கட்டினார்கள். தாங்கள் வசிக்கும் மாளிகைகளைக்கூட அந்த அளவில் அவர்கள் எழுப்பவில்லை. அதனால்தான் கோயில்கள், காலக் கரையான் அரிக்காது இன்றும் வாழ்கின்றன. கோயில்களும்
மடங்களும் ஆதீனங்களும் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தன. எத்தனையோ புனிதர்களின் உழைப்பு ஆகுதியாய் சொரியப்பட்டு எரிந்த வேள்வித் தீயாக உயர்ந்த அவற்றின்
புனிதத்தை இன்றைய நிகழ்வுகள் கலைத்து விட முடியுமா என்ன?
மனித வாழ்வின் அளவில்லாத சுவாரஸ்யங்களில் கனவும் ஒன்று. ‘நல்ல தூக்கம், அப்போ ஒரு கனவு’ என்று அடுத்த முறை யாரும் சொன்னால் நம்பாதீர்கள். கனவுகள் வருவது ஆழ் தூக்கத்திற்கு முன்
நிலையில் தானாம். லேசாக தூக்கம் கண்ணைச் சுழற்றும் நேரம், தூக்கத்தை ஸிணிவி (ஸிணீஜீவீபீ ணிஹ்மீ விஷீஸ்மீனீமீஸீt) நிலை என்கிறார்கள். மூடிய விழித்திரையினுள் கருவிழி அசையும் நிலை.
இந்த நிலையில் தான் கனவுகள் வருகின்றன. அடுத்த கட்டமான ழிஷீஸீ ஸிணிவி என்ற நிலைக்குப் போனால், கருவிழியும் அசைவதில்லை; கனவும் வருவதில்லை. அப்போது அலாரம் அடித்தால், ஆத்திரத்தில் ஓங்கி அதன் தலையில் தட்டிவிட்டு உடனே தூக்கத்திற்குத் திரும்புகிறோம். ‘கனவுகள் ஆழ்மனசின் ஆசைகள்’ என்று ஃபிராய்ட் போன்ற உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்களாம். என்ன
கொடுமை சார்! பாதி தோசையை தின்று கொண்டே ரயிலின் பின்னே ஓட என்றைக்கு என் ஆழ்மனம் ஆசைப்பட்டிருக்கும்? இன்னொரு விஷயம். நாம் இதுவரை கண்டேயிராத ஒரு காட்சி நம் கனவில்
வரவே முடியாதாம். கண்ட பொருள்கள் வேறு கோணங்களில், வேறு இடங்களில் இருப்பது போல் கனவுகள் வரலாமே அன்றி இதுவரை காணாதது கனவில் வரவே வராதாம். பிறவியிலேயே பார்வை
அற்றவர்களுக்கு கனவுகள் குரல்கள்தானாம். காட்சிகள் அன்று.
இலக்கியங்களிலும் இந்திய சினிமாக்களிலும் கனவு ஒரு முக்கியமான உத்தி. கதாநாயகன் கோடம்பாக்க ஸ்டூடியோவில் மூட்டை தூக்கிவிட்டு கதாநாயகியைப் பார்த்தவுடன் இருவரும் அடுத்த
காட்சியில் கனவு கண்டு ஆம்ஸ்டர்டாம் வென்லோவின் டியூலிப் மலர்த்தோட்டத்திற்குப் போய்விடலாம். ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற நாடகமான ஜுலியஸ் சீசரில், சீசரின் மனைவி, ‘நேற்று தீய கனவு கண்டேன், சபைக்குப் போக வேண்டாம்’ என்று எச்சரித்தும் சீசர் அதை சட்டை செய்யாது போகிறான். அன்றுதான் அவன் கொல்லப்படுகிறான். அது சரி, மனைவிகளின் எச்சரிக்கைகளை
கணவர்கள் கவனிக்காது இருப்பது சீசர் காலத்திலிருந்தே சகஜம் போல! நம் இலக்கியங்களில் வரும் மிக அழகான கனவுக் காட்சி, ஆண்டாள் கண்ட கனவினைச் சொல்லும் ‘வாரணம் ஆயிரம் சூழ வலம்
செய்து’ என்று தொடங்கும் பிரசித்தி பெற்ற பத்துப் பாடல்கள். ஆயிரம் யானைகள், தோரணங்கள், பாளை, கமுகு, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நான்கு திசை தீர்த்தங்கள், மத்தளம், சங்கம்,
முத்துப்பந்தல், தீவலம், அம்மி மிதித்தல், பொரி தட்டல், குங்குமம், வீதிவலம், மஞ்சனம் என்று அமர்க்களமான கல்யாணம் (தாலி கட்டும் காட்சி மட்டும் இல்லை). ‘‘இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழி நான்…’’ இதைப்போலவே ராமாயணத்தில் இடம்பெறும் திரிசடையின் இருந்த ஜானகிக்கு உயிரும் உறுதியும் நம்பிக்கையும் கொடுத்த ஒரே தோழி. அரக்கியர் சீதையை
பயமுறுத்தும்போது திரிசடை தன் கனவைச் சொன்னாள். ராவணன், இந்திரஜித், கும்பகர்ணன் எல்லோரும் தேர் ஏறி வேகமாக தென்திசை போவதாகவும் அரக்கியர்களின் தாலி கீழே விழுவதாகவும்
ஆயிரம் தீபம் ஏந்திய பெண் ஒருத்தி விபீஷணனின் மாளிகையில் நுழைவதாகவும் தான் கண்ட கனவு ஒரு நல் நிமித்தம் என்கிறாள் திரிசடை. ‘‘அவ்வளவு தான் கனவு. அப்போது தான் நீ என்ன எழுப்பி
விட்டாய்,’’ என்றும் சொல்கிறாள்.
‘‘இன்னமும் துயில்க’’ என்று சீதை இரு கை கூப்பினாளாம். ‘‘தூக்கத்தைத் தொடர்ந்து, இந்த நல்ல கனவினையும் தொடர்க’’ என்கிறாள், சீதை. தூக்கத்தைத் தொடரலாம். கனவைத் தொடர முடியுமா?
ஆனால் கடும் இருளில் இருந்தவளுக்கு வெளிச்சத்தின் ஒற்றைக் கீற்று ஓரத்தில் தெரிந்து ஏற்படுத்தும் பரவசம் போல, திரிசடையின் கனவு சீதையின் ஒரே நன்நம்பிக்கை முனையானது. அதனால்தான்
‘தூக்கத்தைத் தொடர் – ஒருவேளை கனவும் தொடரலாம்’ என்று சொல்வதாகக் கம்பன் படைத்தான். கங்கைக் கரையில் ஒரு அன்பு மிகுந்த பெண்மணி தூங்கிய போது அவளுக்குள் ஒரு ஒளி பாய்வதாகக் கனவு கண்டாள். அவளுக்கு இறைவன் வரவில் ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கனவுக்கான பலன் சொல்லப்பட்டது. அந்தத் தாயின் மகன்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர். பைபிளின்
பழைய ஏற்பாட்டில் வரும் ஜேக்கப்பின் கனவும் வசீகரமானதே. வானத்திலிருந்து சொர்க்கத்துக்கு எழுந்த மாய ஏணியை – தேவதூதர்கள் விண்ணுக்குப் போகும் பாதையை – ஜேக்கப் கனவில் கண்ட
காட்சியாக பைபிள் வர்ணிக்கிறது. ‘நல்ல கனவுகள் தேவனின் கட்டளைகள்’ எனவும் பல சமயங்களில் நம்பிக்கை உண்டு. ‘‘தூக்கத்தில் வருவதல்ல கனவு. எது நம்மை தூங்க விடாது செய்கிறதோ
அதுவே கனவு’’என்றார் அப்துல் கலாம். மனிதன் செய்திருக்கிற நெடும் பயணத்தில் அவன் அடைந்த வெற்றிகள் எல்லாம் யாரோ ஒருவன் கண்ட கனவே!
நிரோஸ்
really good story