காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.
காதலில் விழுவது, கொக்கேய்ன் போதைப் பொருள் ஏற்படுத்துவதற்கு சமனான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என காதல் தொடர்பாக மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
இந்த ஆய்வின்படி, பார்த்தவுடனே காதல் என்பது சாத்தியமாம். மனிதர்கள் தாங்கள் காதல் கொண்டவர்களைக் கண்ணால் காணும்போது மூளையில் 12 இடங்களில் தூண்டல்கள் இடம்பெறுகின்றனவாம்
இந்நிகழ்வின்போதுதிடீரென சிறப்பாக உணரச்செய்யும்டோபைன், ஒக்ஸிடோஸின், அட்ரனலின் போன்ற இரசாயணங்களை உடலில் சுரக்கச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொகேயின் போதைப் பொருளினாலும் இந்த இரசாயணங்கள் }ண்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது உறுதிப்படுத்துகின்றன என்கிறார் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் ஸ்டெபானி ஓர்டிக். அவர் நியூயோர்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியர்
பேராசிரியர் ஓர்டிக்கும் அவரின் குழுவினரும் மேற்கு வேர்ஜீனியா பல்கலைக்கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந்திலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து மேற்படி ஆய்வை மேற்கொண்டனர்

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *