காதல் என்ற சொல்லினை-நான்
அவள் விழியோரம் கண்டேன்
மெல்ல வெட்கிச்சிரிப்பால் நகைப்பில்
பல அர்த்தம் தனை சொல்லிருப்பாள்
அவள்
காதலை மட்டும் பேசும்
அவள்
காத்திருப்பேன் என்று சொன்ன போதிலும்
கைதுடைக்கும் காகிதமாய்
என்னை நினைத்து-
துடைத்துஎன் கண்ணீர்தனை
கரைத்துவிட்டால்..
என் காதலை கலைக்கும் உரிமை
அவளுக்கு இல்லை-எனவுணர்ந்திருபால் போல
இன்றவள் மாற்றான் மனைவியான போதில்
அவளை நான் பார்த்தும் கோபபடவில்லை
காதல் என்னிடம் பேசியள்
அதே விழியால் மெல்லபார்த்தால்
எனக்கு என்காதலியை பார்த்துவிட்ட திருப்தி
அவளுக்கு நான் அவளை மறந்திருப்பேன்
என நினைத்த திருப்ப்தி
என்னவள் என்னை மறந்திடிலும்
என் காதல் பேசிய அவள் விழிகள்
துடித்து கொண்டுருக்கின்றதல்லவா
என் காதலின் புனிதம்அவள் நினைவை
என் மனதில்
மட்டும் நான் சுமப்பதில்தான்
என் காதலி காதலோடு வாழட்டும்

atputhamana varihal kavithayil vadithulerhal