காத்திருக்க சொல்லிவிட்டுச் சென்றாய்
வருவேன் என்று-வந்தாய்
என் காதலியாக அல்ல
இன்னொருவன் மனைவியாக!!!!
காத்திருக்கும் காதலனை
மறக்காத மங்கையவள்
கணவனைவிட்டு
தனியாகத்தானே வந்திருப்பாள்!!!!
கணவனை விட்டுத்தான் வந்தாள்-ஆனால்
அவனை மறக்காமல் இருக்க
அவன் கொடுத்த
குழந்தையை தூக்கிவந்தாள்!!!!
அப்படி இருக்காது
நாகரீக நங்கையவள்
கொடுத்தவனிடமே
கொடுக்கவந்திருப்பாள்
குழந்தையை!!!!