கிழக்கு ஆசியாவின் பெருநகரங்களில் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் கிட்டப்பார்வை பிரச்சினைக்கு ஆளாவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பள்ளிப் படிப்பின்போது மாணவர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாலும், பிற பழக்கங்கள் காரணமாகவும் அவர்கள் போதிய நேரம் கட்டிடங்களுக்கு வெளியே பொழுதைக் கழிக்காததே அவர்களிடையே கிட்டப்பார்வை பிரச்சினை இந்த அளவுக்கு வேகமாக அதிகரித்துள்ளதன் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.கிழக்கு ஆசியாவின் பெருநகரங்களில் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் கிட்டப்பார்வை பிரச்சினைக்கு ஆளாவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பள்ளிப் படிப்பின்போது மாணவர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாலும், பிற பழக்கங்கள் காரணமாகவும் அவர்கள் போதிய நேரம் கட்டிடங்களுக்கு வெளியே பொழுதைக் கழிக்காததே அவர்களிடையே கிட்டப்பார்வை பிரச்சினை இந்த அளவுக்கு வேகமாக அதிகரித்துள்ளதன் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டு தலைமுறை காலத்தில் பெரும் மாற்றம்தென் கிழக்கு ஆசியாவில் இந்த ஆய்வு நடத்தப்பட்ட சமூகங்களில் மக்களிடையே சராசரியாக 20 முதல் 30 சதவீதமானோருக்குத்தான் கிட்டப்பார்வை பிரச்சினை இருந்துவந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு தலைமுறைகளுக்குள்ளேயே இந்த சராசரி என்பது 90 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்த ஆய்வுக்கு தலைமை ஏற்றிருந்த ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் இயன் மார்கன் தெரிவித்துள்ளார்.போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காமல் கிட்டப்பார்வை வந்த இந்த இளம் பிராயத்தினரில் ஐந்தில் ஒருவருக்கு மோசமான பார்வைக் கோளாறோ சில வேளைகளில் பார்வைத் திறன் அற்றுப்போகும் சூழ்நிலையோ ஏற்படலாம் என தி லான்செட் சஞ்சிகையில் தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
நமது கண்ணில் இருந்து இரண்டு மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள பொருட்கள் கலங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும்போது அதனை கிட்டப்பார்வை என்று சொல்கிறோம்.
கல்விச் சுமை
கிழக்கு ஆசிய மாணவர்களிடையே கல்விச் சுமை கூடிப்போயிருப்பதும், கட்டிடங்களுக்கு வெளியே சூரிய ஒளி நேரடியாகப் படும் மாதிரியாக அவர்கள் பொழுதைக் கழிக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டதும் அவர்களிடையே இந்தப் பிரச்சினை இந்த அளவுக்கு அதிகமாக அதிகரிக்கக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் கிழக்கு ஆசியாவில் இளம் வயதினர் மிக அதிக நேரத்தைப் படிப்பிலும் வீட்டுப் பாடம் செய்வதிலும் கழிக்கின்றனர். அது அவர்கள் கண்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் தென்கிழக்கு ஆசிய மாணவர்களை மதிய நேரத்தில் தூங்கச் சொல்லும் ஒரு கலாச்சாரமும் இருப்பதால், அவர்கள் சூரிய ஒளி படும் மாதிரியாக பொழுதைக் கழிக்க வழியில்லாமலேயே போய்விடுகிறது என பேராசிரியர் மார்கன் சுட்டிக்காட்டுகிறார்.
தவிர தொலைக்காட்சி, கணினிகள், கைத்தொலைபேசிகள், வீடியோ கேம் சாதனங்கள் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் பார்வைத் திறன் பாதிக்கப்படுவதற்கு காரணாக அமைந்துவிடுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஒரு சமூகத்தில் சராசரியாகக் காணப்படும் கிட்டப்பார்வை பிரச்சினைக்கு மரபணுக் காரணிகள்தான் அதிக பங்கு வகிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர். ஆனால் தென்கிழக்கு ஆசியாவில் இரண்டு தலைமுறை காலகட்டத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதால், மரபணு மாற்றங்கள் காரணமாக இருக்க முடியாது, பழக்க வழக்கங்கள்தான் பெரியகாரணமாக இருக்க முடியும் என்றும் இந்த ஆராய்ச்சி உணர்த்தியுள்ளது.