1. மயில் ஜடை:
முதலில் முன் பகுதியை சரி செய்யவும். பிறகு முடி எடுத்து போனி டைல்ஸ் போடவும். பிறகு சுற்றிலும் சுருள் மற்றும் நடுவில் ஒரு சுருள் போடவும் பிறகு மீதமுள்ள முடியில் சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சலம் வைத்து பின்னவும். பிறகு மயில் வடிவத்தை அதில் இணைக்க வேண்டும்.
2. கதம்ப ஜடை:
நேர் வகிடு எடுத்து முன் பகுதியை சரி செய்து உச்சியில் முடி எடுத்து பில்லை செட் செய்யவும் பில்லை சுற்றி கதம்ப மலர் சுற்றி வைத்து கதம்ப இணைப்பை வைக்கவும்.
3. மல்லிகை மற்றும் கோழிகொண்டை ஜடை:
முகத்திற்கு தக்கபடி வகிடு எடுக்கவும். பிறகு தேவையான நீளத்திற்கு பின்னல் போட்டு தேவையான நிறத்தில் குஞ்சலம் வைத்து கொள்ளவும். அதன் பின்னர் மல்லிகை மற்றும் கோழி கொண்டை பூவை வைத்து அடுக்கு அடுக்காக அலங்கரிக்கவும்.
4. முகூர்த்த ஜடை:
தேவையானபடி வகிடு எடுத்து உச்சிபில்லை வைத்து பின்னல் போட்டு தங்க நிறம் குஞ்சலம் அல்லது குண்டு குஞ்சலம் வைக்கவும். பின்னர் ஜடை அலங்காரத்தை கூந்தலில் வைத்து கட்டி விடவும் பின்னர் பெங்களூர் ரோஸ் வைத்து நடு நடுவே அலங்கரிக்கவும்.
5. கொண்டை ஜடை:
கூந்தலின் நடுப்பகுதியில் பப் வைக்கவும். பிறகு போனிடைல் போடவும். கூந்தலை இரண்டு பகுதியாக பிரிக்கவும். முதல் பகுதியில் சுருள் போடவும் மீதியுள்ள பகுதியில் பின்னல் போட்டு குஞ்சலம் வைக்கவும். விருப்பத்திற்கு ஏற்ப கோழி கொண்டை, மல்லிகைப்பூ, நகை வைத்து அலங்கரிக்கவும்.
6. கோல்டா ஜடை:
தேவையானபடி பிரன்ட்செட் செய்து பின்னர் ஒரு பகுதி முடியை எடுத்து அதில் கோல்டன் ரிங் வைக்கவும். அதன் பின்னர் மீதியுள்ள முடியை பின்னல் இட்டு குஞ்சலம் வைத்து கோல்டன் இணைப்பு, கோழி கொண்டை, மல்லிகைபூ வைத்து அலங்கரிக்கவும்.
7. ரிசப்சன் ஜடை:
முதலில் முன்பகுதியில் ”பப்” வைக்கவும். பிறகு ஓவர் டேப் சுருள் போடவும். அதன் பின்னர் மீதியுள்ள முடியை சவுரி வைத்து பின்னல் இட்டு குஞ்சலம் வைக்கவும். அதன் பின்னர் நகை இணைப்பை உச்சியில் வைக்கவும். அதன் பிறகு கோழி கொண்டை மற்றும் மல்லிகை வைத்து அலங்கரிக்கவும்.
8. பேஷன் ஜடை:
முதலில் முகத்திற்கு ஏற்ப வைத்து கொண்டு அதன் பிறகு உச்சிபில்லை (ராக்கொடி) வைத்து சவுரி வைத்து ஜடை பின்னி பிறகு குஞ்சலம் வைக்கவும். அதன் பிறகு உச்சியில் கோழி கொண்டை வைத்து அலங் கரிக்கவும். பின்னர் ஜடையில் நகை வைத்து அதன் மேல் கோழி கொண்டை சம்பங்கியை வைத்து அலங்கரிக்கவும்.
9. பழம் மற்றும் இலை ஜடை:
முதலில் முகத்திற்கு ஏற்ப முன்பகுதியை சரி செய்து கொள்ளவும். அதன் பிறகு உச்சிபில்லை வைத்து சவுரி வைத்து பின்னி அதன் பிறகு குஞ்சலம் வைக்க வேண்டும். பில்லை சுற்றி பழங்கள் வைத்து கட்டவும். வெற்றிலையின் மேல் சாத்துக்குடியை வைத்து அதன் மேல் திராட்சை வைத்து அலங்கரிக்கவும்.
10. சிம்பிள் முகூர்த்த ஜடை:
முதலில் வகிடு எடுத்து பில்லை இணைக்கவும். பின்னர் சவுரி வைத்து குஞ்சலம் வைத்து அதன் பின்னர் மல்லிகைப் பூவை பில்லையில் சுற்றி அதன் ஜடை மேல் சுற்றி விடவும். பிறகு ஜடை நடுவில் பென்டன்டை வைத்து அலங்கரிக்கவும்.
11. முந்திரி மற்றும் செரி ஜடை:
முதலில் முன் பகுதியில் பில்லை வைத்து அதன் பிறகு சவுரி வைத்து குஞ்சலம் வைத்து பின்ன வேண்டும். பிறகு முந்திரி, செரி பழம் வைத்து அலங்கரிக்கவும். அதன் பிறகு திராட்சை, மல்லிகை, கனகாம்பரம் வைத்து அலங்கரிக்கவும்.
12. முஸ்லிம் மணப்பெண் ஜடை:
முதலில் முகத்திற்கேற்ப முன் பகுதியை சரி செய்யவும். பிறகு சவுரி வைத்து ஜடை பின்னி குஞ்சலம் வைத்து அதன் பிறகு “கோல்டன் பீட்ஸ்” வைத்து அலங்கரிக்கவும்.
13. பிரஞ்ச் பிளாட்:
முதலில் கண் புருவ பகுதியில் இருந்து முடியை எடுத்து அதை நார்மல்பிளாட் ஆரம்பிக்கும்படி தொடங்கவும். அடுக்காக எடுத்து முன் பகுதியை சரி செய்யவும். அதே போல இரண்டு பக்கமும் செய்யவும். இதை காது வரை போடவும் பிறகு மீதியுள்ள முடியில் நார்மல்பிளாட் போடவும். பிறகு பீட்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.
14. ஐந்துகால் பின்னல்:
முதலில் பிரன்ச் பிளாட் போட்டு கொண்டு அதன் பிறகு மீதியுள்ள முடியை ஐந்து பகுதியாக பிரித்து முதல் மூன்று கால்களில் சாதாரணமாக போடவும். பிறகு இரண்டு பகுதியை எடுத்து இணைக்கவும். அதன் பின்னர் பூக்கள் வைத்து பீட் வைத்து அலங்கரிக்கவும்.