சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெண்கள் தொடர்பான சுவாரஷ்யமான ஆய்வு ஒன்றில் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பேஸ்புக், ருவிற்றர் போன்ற சமூக வலைத்தளங்களை உலக அளவில் 58 வீதமான பெண்கள் பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

2008 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுக்குள் சமூக இணையங்களைப் பயன்படுத்துவோர் தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 850 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை மூன்று வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாம்.

ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் ஒவ்வொரு நாளும் இடம்பெறும் சம்பவங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து போஸ்ட் செய்கிறார்களாம்.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Pew என்ற தன்னார்வ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றே மேற்படி சுவாரஷ்யமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *