அண்மையில் ஓர் இணையத்தளத்தில் பார்வையிட்ட பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொள்கிறேன்.. அந்த பதிவின் நகல் உங்கள் பார்வைக்காக…..

உங்கள் பார்வைக்கு..
இப்பொழுது இந்தப் பதிவினை அணைவரும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

இவருடைய பதிவு சரியானதா??????????
தன்னுடைய இணையத்தளத்தினை பிரபல்யம் அடைய வைக்கும் ஒரே நோக்கத்திற்காக இவ்வாறான தேவையற்ற இடுக்கைகளை போட்ட வண்ணம் உள்ளார். இவர் இந்த தளத்திற்கு யாழ்ப்பாணத்தின் பெயரினை பாவிக்காது வேறு ஏதாவது பெயரினை வைத்திருக்கலாம். இவர் இப்படியோர் பிழைப்பு பிழைப்பதற்கு வேறு ஏதாவது(தப்பா நினைக்க வேணாம் ஒழிந்திருந்து வீடியோ எடுத்ததற்காக சொன்னேன்) தொழில் செய்யாலாம்.

இந்த வீடியோ பதிவில் அப்படி என்ன இருக்கிறது( நன்றாக அவதானித்தால் தெரியும், சாரம் கட்டிய பெரியவரின் பின்னால் உள்ளவரை..). அப்படி எனின் இவர் இதே வீடியோவினை வைத்து இன்னுமோர் இடுக்கையினை இடுவார் என நினைக்கிறேன்.(யாழ்ப்பாணப் பேருந்துகளில் ஆண்களை ஆண்களே அயன் பண்ணும் காணொளி..)இவர் என்ன யாழ் பேருந்துகளில் பயணிக்காதவரா?? யாழ்ப்பாணதில் எவ்வாறு பேருந்துகள் போகிறது என இவருக்கு உண்மையாகவே தெரியாதா??? இவரின் குடும்பட்த்தினர் என்ன பேருந்து வாடையே அறியாதவர்களா???( நான் இவ்வாறு இடுவதை தப்பாக எண்ண வேண்டாம்.. இது தனிய என் கருத்து கிடையாது…)

அணைவருக்கும் தெரியும் பிற மாவட்டங்கள் போல் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி பேருந்து கிடையாது. வெகு நேரம் காத்திருந்தால் தான் பேருந்தினை எடுக்க முடியும். அதுவும் அராசாங்க பேருந்து கிடைப்பதென்பது மிகவும் அரிது. கூடுதலாக தனியார் பேருந்து தான். தனியார் பேருந்து எனில் double door பேருந்து கிடையாது. மினிவான் எனப்படும் ஓர் சிறு பஸ். யாழ்பாணத்தில் இருந்தவர்களிற்குத் அந்த வான் பற்றித் தெரியும்.

நீங்களே சொல்லுங்கள் இவரை என்ன செய்யாலாம்??? இவருடைய இடுக்கை சரியானதா??? இவர் கூறுகிறார்….: இப்படி பாலியல் சேட்டை செய்பவைகளை தன்னுடைய இணையத்தளத்தில் பகிரங்கமாக பிரசுரிப்பாராம். ஃபேஸ்புக் கணக்கினூடாக தம்பி, தங்கை, மனைவிக்கு அனுப்புவாரம். நல்ல வேடிக்கையான மனிதர். இவர் அவ்வாறு செய்வாரெனின் இவரின் குடும்பத்தினர் படங்களையும் நாம் விரைவில் இவரின் தளத்திலேயே பார்வையிடமுடியும். ஏனெனில் இவர் குடும்பமும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரை அது போன்ற பேருந்துகளில் தான் பயணிக்க வேண்டியிருக்கும்.

இன்னும் ஓர் கவலைக்குரிய விடயம் என்னவெனில் , இதை 66 பேர் ஃபேஸ்புக்கில்(share) பங்கிட்டிருக்கிறார்கள். இப்படியானவர்கள் இருக்கும் வரை இவ்வாறான மநிதாபிமானம் அற்ற இடுக்கைகளை தடுக்கவே முடியாது. உங்கள் போன்றவர்களே போதும் அவனை இப்படி கேவலம் கெட்ட இடுக்கைகளை போட தூண்டுவதற்கு. மூடர்களே….
தவறு செய்பவனை மேலும் தூண்டிக் கொண்டிருக்கிறீர்களே!!!!!

இவர் போடும் இடுக்கைகளில் உள்ளவர்கள் தம்மை இனங்கண்டு இவரின் தளத்தின் மீது வழக்குப் பதிந்தால் என்ன நிகழும்???

தான் ஏதோ சமூகத்திற்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு முட்டாள்த்தனமான காரியங்களைச் செய்து வருகின்றார். இவருடைய இவ்வாறான தரக்குறைவான இடுக்கைகள் அவசியம் கண்டிக்கப்பட வேண்டியவையே!!!!

என்னுடைய இந்த இடுக்கையில் ஏதேனும் பிழை இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டவும்!!!

நன்றி:- சேர்க்கைகள்

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *