சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள வேத பாடசாலை மற்றும் பாலசம்ஸ்கார கேந்திரா ஆகியவற்றின் 4ம் ஆண்டு விழா ஜூன் 17ம் தேதியன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 6 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்ற இவ்விழாவில் வேத பாடசாலை மாணவர்களின் வேத பாராயணங்கள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், பாடல்கள், இந்து புராண நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆஸ்திரேலிய விஸ்வஹிந்து பரிசித் அமைப்பினர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். சுமார் 150க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 90க்கும் மேற்பட்ட பெரியோர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். 650 மேற்பட்ட மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பால சஸ்கார கேந்திரா மாணவர்கள் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சமஸ்கிருத பாடல்களை பாட அனைவரையும் மகிழ்வித்தனர். ஆஸ்திரேலியாவில் வேத மற்றும் கலாச்சார மையம் அமைக்க வேண்டும் என்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை விழாவில் முன் வைக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
