உலகில் சிறப்பாக ஆடை அணியும் முதல் பத்து ஆண்கள் பட்டியலில் இந்தியாவின் விராத் ஹோக்லி இடம் பெற்று அசத்தியுள்ளார்.
ஆண்களுக்கான “பெஷன்’ இணையத்தள பத்திரிகை “ஜி.கியு’. இதன் சார்பில் சர்வதேச அளவில் சிறப்பாக ஆடை அணியும் நபர்களை தேர்வு செய்தது.
இதில் ஆச்சரியப்படும் விதமாக, இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் விராத் ஹோக்லி (வயது 23), மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் திறமையை வெளிப்படுத்தி வரும் இவருக்கு இது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
இந்தப் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், விராத் ஹோக்லி துடுப்பாட்ட “ஸ்டைல்’ காரணமாக இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறார், என்று தெரிவித்துள்ளது.
முதலிடத்தில் ஜேர்மனி நடிகர் மைக்கேல் பஸ்பாண்டர் உள்ளார். இதுதவிர, கனடா நடிகர் ரியான் கோஸ்லிங், வின்சென்ட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு, இந்தப் பட்டியலில் கடைசி இடம் தான் கிடைத்துள்ளது.