கனடாவின் டொறொண்டோ அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
கனடாவில் வந்து வாழும் வெளிநாட்டவர்களுக்கு டொறொண்டோவும், வான்கூவரும் செலவு மிகுந்த நகரங்களாக உள்ளது.

214 நகரங்களை ஆய்வு செய்ததில் டொறொண்டோ 61ஆவது இடத்திலும், வான்கூவர் 63ஆவது இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 33ஆவது இடத்தில் இருப்பதால், இதுவே வட அமெரிக்காவின் செலவு மிகுந்த மாகாணமாக கருதப்படுகிறது.

ஆனால் ஜப்பான், ஆசியா, ஐரோப்பா, ரஷ்யா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றோடு ஒப்பிடும் போது அமெரிக்கா செலவு குறைந்த இடமாக உலக அளவில் அறியப்பட்டுள்ளது.

உலகின் செலவு மிகுந்த நகரங்கள் ஜப்பானில் தான் உள்ளன. அவை டோக்கியோ, லூவாந்தா, அங்கோலா மற்றும் ஓசாகா ஆகியனவாகும்.

உலகிலேயே செலவு குறைந்த நகராக பாகிஸ்தானில் உள்ள கராச்சி அமைந்திருக்கிறது.

கனடாவில் மொன்றியல்(87 ஆவது இடம்), கேல்கரி(92), ஒட்டாவா (115) போன்ற நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

வீட்டு வசதி, போக்குவரத்து, உணவு, உடை, வீட்டு உயோகப் பொருட்கள், பொழுதுபோக்கு போன்ற 200 விடயங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *