2012 இன் பிரிட்டனின் அழகு ராணியெனப் பெயர் பெற்ற ஹோம்ஸ் சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியின் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார். இவர் பிரிட்டனின் பரிசோதனைக் குழாய் குழந்தை ஆவார். எனினும் இவரைப் பார்ப்பவர்கள் சோதனைக்குழாய் குழந்தை எனக் கூறமுடியாது.
இங்கிலாந்தின் அழகுராணியாக முதற்தடவையாக சோதனைக்குழாய் குழந்தை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1988 இல் வான்னி – கென் தம்பதியினருக்கு பேராசிரியர் வின்சன்ட் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கினார். உலக அழகி பட்டத்தினை தனதாக்கிக் கொள்ள இறுதிப் போட்டியில் அவர் போட்டியிடுகின்றார்.
அதற்காக சீனா செல்லும் சார்லட் 119 அழகிகளுடன் இந்தப் பட்டத்திற்காக போட்டிபோடுகிறார். மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்றதன் மூலம் உலக அழகிப்போட்டியில் பங்கு பெற வாய்ப்புக் கிடைத்ததாகக் கூறும் சார்லட் இந்தப் போட்டியில் பங்கேற்பதை தன்னால் வார்த்தைகளில் விபரிக்க இயலவில்லை என்று கூறியுள்ளார்.
எட்டாண்டுகள் குழந்தைகள் இல்லாது மிகவும் கவலையுடன் இருந்த எங்களுக்கு பேராசிரியர் வின்ஸ்டனிடம் சிகிச்சைக்கு சென்ற பின்பே டெஸ்ட் டியூப் மூலம் இந்தக் குழந்தை பிறந்தது என்று சார்லட்டின் தந்தை கென் கூறியுள்ளார். அவருக்கு தற்போது வயது 64 ஆகின்றது.
இவர் கணனித்துறையில் வர்த்தகம் செய்து வருகிறார். சார்லட்டின் தாயார் வான்னிக்கு தற்போது 60 வயதாகிறது. தங்களுக்கு பிறந்த குழந்தை தற்போது உலக அழகிப் போட்டி பட்டம் வெல்வதற்குத் தயாராகி வருவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். ___