தமிழ் இலக்கிய வளர்ச்சியில் யாழ்ப்பாணத்திற்கு பெருமையான இடமுண்டு பரராசசேகரன் காலம் முதல் பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் தோன்றி வளர்ந்த மண் இது ஆனால் இன்று கலை இலக்கிய வெளியீடுகள் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கு ஒரு பொது மண்டபம் குறைந்த வாடகைக்கு கிடைப்பதில்லை நாவலர் கலாச்சார மண்டபம் நூலக மண்டபம் சில தனியார் அரங்குகள் பத்தாயிரம ருபாவிற்கு மேல் வாடகை கேட்கின்றன பாடசாலை அரங்குகள் பாடசாலைக்கு வெளியெ உள்ளவர்கள் பயன்படுத்த பல தடைகள் அதிபரிடம் அனுமதி பெற்று பின்பு கோட்ட கல்வி அதிகாரி கல்விபணிப்பாளர் என்று பலரிடம் சிபார்சு பெற்று பின்பு மருதனாமடம் சென்றே அனுமதி பெறமுடிகிறது .இதை விட புத்தகத்தை வெளியிடாமலே இருக்கலாம் என அலுத்துக்கொண்டார் எழுத்தாளர் ஒருவர் இந்த நிலை நீங்க வேண்டும் கலாசார அமைச்சும் சம்பத்ப்பட்ட அதிகாரிகளும் பொதுவான அரங்கொன்றை குறைந்த வாடகைக பெறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அப்போதே பல வகையாலும் நலிவுற்றிருக்கும் தமிழ் இலக்கிய துறையை வளப்படுத்த முடியும்.
வேலணையூர்-தாஸ்