துபாய்: உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளை ஜுலை மாத‌ ந‌கைச்சுவை கூட்ட‌ம் அல் கிஸ‌ஸ் ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. உல‌க‌ நகைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளை த‌லைவ‌ர் முஹைதீன் பிச்சை த‌லைமை வ‌கித்தார். உத‌வித் த‌லைவ‌ர் இத்ரீஸ் வ‌ர‌வேற்றார்.

பாவை நியாஸ், முத்துக்கோதை, த‌ண்ணீர்ம‌லை, சிவ‌குமார், சேஷாத்ரி, அஹ‌ம‌து இப்ராஹிம், இளைய‌ராஜா உள்ளிட்ட‌ ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து ந‌கைச்சுவைக் குறிப்புக‌ளை ப‌கிர்ந்துகொண்டு கோடையின் வெப்ப‌த்தைக் சிரிப்ப‌லையின் மூல‌ம் குளிர்வித்த‌ன‌ர்.
நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ர் குணா நிக‌ழ்வினை தொகுத்து வழ‌ங்கினார். நிக‌ழ்விற்கான‌ ஏற்பாடுக‌ளை உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் கான் முஹ‌ம்ம‌து, யூசுப், க‌ம‌ல‌க்க‌ண்ண‌ன், சுல்தான் செய்திருந்த‌ன‌ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *