சுவீடன் நாட்டுக்கு அருகாமையில் இருக்கும் பல்டிக் கடல் பகுதியில், ஆழமான இடம் ஒன்றில் வேற்றுக்கிரக மனிதர்கள் பயணிக்கும் விமானத்தை ஒத்த வடிவிலான உருவம் ஒன்று காணப்படுகிறது. இது சுமார் கடல் படுக்கையில்(கடல் நிலமட்டத்தில்) இருந்து 20 அடி உயரம் கொண்டதாக அமைந்திருக்கிறது. கல்போன்ற அமைப்பை உடைய தாதுக்களால் இது சூழ்ந்துள்ளதாகவும், ஒரு விமானம் வந்து தரையிறங்கும்போது அது ஓடுபாதையில் செல்வது போன்ற அமைப்பை, கடலுக்கு அடியில் இன்னமும் காணக்கூடியதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கற்களினால் ஆன பொருள் சுமார் 980 அடி நீளத்திற்கு கடலுக்கு அடியில் வேகமாகப் பயணித்து, பின்னர் இந்த இடத்தில் தரையிறங்கியுள்ளது எனச் சொல்லப்படுகிறது.
வேற்றுக்கிரக மனிதனர்கள் பயணிக்கும் விமானத்தை ஒத்த உருவமுடைய இக் கல், எங்கிருந்து வந்தது என்றோ இல்லையேல், இக் கல்லுக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்தே இன்னும் கண்டறியப்படவில்லை. கற்களை படலமாகக் கொண்டு, உள்ளே பிறிதொரு அமைப்பில் இந்த மர்மப் பொருள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனை அவதானித்த விஞ்ஞானிகள், தாம் இதுவரை கடலுக்கு அடியில் இவ்வாறானதொரு பொருளைக் கண்டதில்லை என்று தெரிவித்துள்ளனர். இம் மர்மப் பொருள் குறித்து விரைவில் ஆராட்சிகள் நடைபெறவுள்ளது.