சொல்லிவிட்டோம் என்று யோசிக்க வேண்டாம். ஆம் முதல் பிரச்சினை மட்டுமல்ல, கடைசிப் பிரச்சினையும் காதலர்கள்தான்.

சரி, நாம் இங்கு முதல் பிரச்சினையை முதலில் சொல்லிவிடுவோம்.

அவள் என்னைப் பார்க்கிறாள், அவன் என்னைப் பார்க்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் காதலர்கள் செய்ய வேண்டிய விஷயம் என்ன.

அவர்களுடனான பேச்சையோ அல்லது தொடர்பையோ உருவாக்குவதுதான்.

முதலில் அவர்களுடன் பேச முயற்சிக்க வேண்டும். பேசும்போது அவர்களது மனதில் என்ன இருக்கிறது என்பது புலனாகிவிடும்.

பிறகு தயங்காமல் காதலை வெளிப்படுத்த வேண்டும். தயங்கி தயங்கி தாமதித்தால் காதல் கல்யாணத்தில் முடியாது, உங்கள் காதலிக்கு கல்யாணம் ஆவதில்தான் முடியும்.

எனவே அவர் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாறாதீர்கள்.

பல இடங்களில் காதலை வெளிப்படுத்தாமலேயே காதல் முடிந்து விடுவது உண்டு. இதற்கு காதலர்கள்தான் காரணம்.

அவர் சொல்வார் என்று இவளும், இவள் சொல்வார் என்று அவரும் தயங்கியதே காதல் விதை வளராமல் மண்ணில் மக்கிப்போவதற்கு காரணமாக இருக்கும்.

காதலை சொல்லத் தைரியம் மிக அவசியம். அதை விட காதலை சொல்லும் விதம் மிக மிக முக்கியம். நாம் காதலை சொல்லும் போது, அவர்களுக்கு இதுவரை காதல் வராமல் இருந்தால் கூட மறுப்பு தெரிவிக்க முடியாத நிலையை ஏற்படுத்த முடியும்.

நீ இல்லையேல் நான் இல்லை. என் உயிர் நீ தான் என்றெல்லாம் பழைய புராணம் பாடி காதலியின் இதயத்திற்கு பதிலாக உயிரை வாங்கிவிடாதீர்கள்.

நச்சென்று உங்கள் எண்ணத்தை பிரதிபலியுங்கள். அதே சமயம், நீ இருந்தால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்பது போன்ற தன்னம்பிக்கை மிக்க வாக்கியங்களை உங்கள் உரையாடல் அல்லது கடிதத்தில் நிரப்புங்கள்.

காதலை சொல்ல முடிவெடுத்த பின்னர், அதனை தெளிவாக குழப்பாமல் தைரியமாக சொல்ல வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

இன்று காதலைச் சொல்ல எத்தனையோ வழிகள் வந்துவிட்டன, தொலைபேசி, எஸ்எம்எஸ்கள், ஈமெயில், காதல் அட்டைகள் என உங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

எல்லாமே தயாராக இருந்தாலும், காதலை சொல்ல முதலில் நீங்கள்தான் தயாராக வேண்டும்.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *