வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தென்பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் யாழ். குடாநாட்டுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் யாழ். குடாநாட்டுக்கு வருவதற்காக தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்கள் விசேட மேலதிக சேவைகளை வழங்கி வருகின்றன. குறிகட்டுவானுக்கான படகு சேவைகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன. கடற்படையினர் மேலதிக படகுகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான குடிநீர் ஏற்பாடுகளை வேலணை பிரதேச சபை மேற் கொண்டுள்ளது. பக்தர்களுக் கான சுகாதார சேவைகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு சென்.ஜோன்ஸ் அப்பியூலன்ஸ் பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டு வதற்கு பொலிஸார் சேவை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப் படுகிறது.