நயீனாதீவு பிரதேசத்திற்கு விரைவில் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவாராசா தெரிவித்தார்.
இதற்காக கொழும்பில் இருந்து மின் பிறப்பாக்கி நயீனாதீவுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
“அத்துடன் இதுவரை காலமும் நயீனாதீவுப் பிரதேசத்திற்கு காலை 9 மணி தொடக்கம் 2 மணி வரையிலும் மாலை 6 மணியில் இருந்து 12 மணி வரையும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இதனால் இப்பகுதியில் வாழந்த மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும் குறுகிய காலத்தில் இந்தப்பிரதேசம் முழுவதற்கு 24 மின்சாரம் வழங்கப்படும் என” அவர் மேலும் தெரிவித்தார்.