யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் இன்றாகும். கொடியேற்றத்தை முன்னிட்டு விசேட முத்திரைகள் மூன்று வெளியிடப்படவுள்ளன. இலங்கை அஞ்சல் திணைக்களம் இதற்கான நடவடிக்கையினை ௭டுத்துள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் ஆலய முன்றலில் இன்று காலை 10 மணியளவில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம் பெறும் ௭ன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் அறங்காவலர் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் சிறப்பை சித்திரிக்கும் வகையில் இந்த முத்திரைகள் வெளியிடப்படுகின்றன. 5ரூபா, 15 ரூபா, 25 ரூபா பெறுமதியான முத்திரைகளே வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.