அனைவரும் கூறும்
கூற்று ஒன்று
என்றும் நீ கலங்காதே!!!
உன்
நிழலாக நான் என்றும் வருவேன்…
ஆனால்
நீ
நிழலானது தான் இங்கு
பிரச்சினையே!!!
வெளிச்சத்தில் மட்டுமே
என்னுடன் வரும் உன்னை
எவ்வாறு நான்
ஏற்றுக்கொள்வது…?
சந்தோசத்தில் மட்டும் தான்
என்னுடனா???
இருட்டில் என் நிலை
என்னவாவது???
ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.
நேரத்திற்கு நேரம்
உருமாறும் உன்னுடன்
எவ்வாறு நான்
நின்மதியாய் இருப்பது???
ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.
சில நேரங்களில்
நீ
என் காலுக்கடியில் போகநேரிடுமே!!!
உன்னால் அது முடியாதே…
ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.
நிலையில்லா உருவமற்ற
நிழலே!!!!
நீ,
என்றுமே எனக்குத் தேவையில்லை.
இ.சுகானன்.