விந்தையான விண்வெளி ரகசியங்களில் சுமார் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு விண்வெளியில் நெபுலா எனப்படும் மையபகுதியிலிருந்து சூரியன் உள்பட ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் தோன்றியதாக கருதப்படுகிறது. பால்வெளியில் அவை இப்பொழுது எங்கு உள்ளன. சூரியனின் அந்த நட்சத்திர சகோதரர்களை பற்றிய தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கிடையில், கடந்த வருடம் டச்சு நாட்டை சேர்ந்த வானியலாளர் போர்சுகீஸ் ஷ்வார்ட் என்பவர், பூமியை சுற்றி 330 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஏறக்குறைய 10 முதல் 60 நட்சத்திரங்கள் வரை பரவியிருக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டார்.

இரவு நேரத்தில், ஒரு பைனாகுலர் உதவியுடன் இவ்வகை நட்சத்திரங்களை எளிதில் பார்க்கலாம் என்றார். மேலும், இவை சூரியனின் வயது, வேதியியல் அமைப்பு மற்றும் விண்வெளியில் பயணம் ஆகியவற்றில் ஒத்திருக்கும். இதனால் நமது சூரிய குடும்பம் எவ்வாறு பிறந்தது என்பதற்கான விடையையும் இந்த நட்சத்திரங்கள் கொண்டிருக்கும் என்றும் கூறினார். ஆனால் ரஷ்ய வானியலாளர் யூரி மிஷுரோவ் இந்த கருத்துகளை ஏற்று கொள்ளவில்லை. பால்வெளியில் சூரியனின் இந்த சக நட்சத்திரங்கள் அதிகளவில் ஈர்ப்பு விசை கொண்டிருக்கும்.

அதனால் அவை சுற்றி வரும் பாதையும் மாறியிருக்கும் என்றார். மேலும் அவரது கணக்கின்படி, 3 அல்லது 4 நட்சத்திரங்கள் சூரியனின் மிக அருகில் பால்வெளியில் அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார். இது பற்றி கேம்பிரிட்ஜ் வானியலாளர் ஜெரார்டு கில்மோர் கூறும் போது, சூரியனை போன்று தோற்றம் உடைய மற்ற நட்சத்திரங்களை கண்டறிவது சற்று சிக்கலான விசயம். எனினும் விண்வெளியில் மறைந்திருக்கும் இதுபோன்ற அபூர்வ விசயங்களை ஆராய்வது அறிவியலுக்கு உகந்த ஒன்று என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *