1000 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர் நியமனங்களும் டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களும் வழங்கும் வைபவம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறு கிறது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, பிரதி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா மற்றும் கல்வி அமைச்சின் கண்காணிப்பு எம்.பி. மொஹான் கிரேரோ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதே வேளை வட மாகாணத்திற்கென இன்று நியமனம் வழங்கப்படும் 222 ஆசிரியர்களும் வன்னி மற்றும் தீவகப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வட்டக்கச்சி, மன்னார் மற்றும் மடு ஆகிய பிரதேசங்களுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவர்களில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு 59 ஆசிரியர்களும், ஏனைய பாடங்களுக்கு 163 ஆசிரி யர்களும் அடங்குவர்.
வன்னி மற்றும் தீவக பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஐம்பது பாடசாலை களில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்த அவர் இந்த பிரதேச மாணவ, மாணவி களின் கல்வி நலனை கருத்திற் கொண்டே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
நியமனங்களை பெற்றுக் கொள் ளும் ஆசிரியர்கள் நியமனம் வழங் கப்பட்ட திகதியிலிருந்து 14 நாட்களு க்குள் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த அவர் இந்த நியமனங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படமாட் டாது என்றார்.
இம்முறை அதிக மான இளம் ஆசிரியர்களே நியம னங்களை பெற்றுக் கொள்ளவுள் ளதாக தெரிவித்த ஆளுநர் மேற்படி பிரதேச மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப் படும் பிரதேசத்தில் சேவையாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.