மட்டக்களப்பு புகையிரத வீதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவரை வெலிகந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
நேற்று நண்பகல் நகைக் கடைக்குச் சென்று வீடு திரும்பிய பெண்ணொருவர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண், மட்டக்களப்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர்கள் வெலிகந்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.