ஜனீவாவுக்கு சமீபமாகவுள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கவுன்சிலின் (சேர்ன்), ( Cern) ஆய்வு கூடத்தில் கடவுளின் துணிக்கை அல்லது றிதஸ் போசன் (Higgs boson) என்ற புதிய உப அணுத் துணிக்கையைக் கண்டுபிடித்திருப்பதாகக் கடந்த புதன்கிழமை விஞ்ஞானிகள் உலகத்திற்கு அறிவித்திருப்பதானது பிரபஞ்சம் பற்றி புரிந்துகொள்வது தொடர்பாக நாம் கொண்டுள்ள ஆவலுக்கு முடிவு கட்டுவதாக அமைந்துவிடாது. ஆனால், உண்மையிலேயே இது விஞ்ஞானத்திற்கும் அறிவியல் துறையில் சர்வதேச ஒத்துழைப்புக்குமான பாரிய வெற்றியாகும்.
பௌதிகவியலாளர்களால் பல தசாப்தங்களாக தேடுதல் வேட்டை நடத்திய “றிதஸ் போசன்’ என்ற துணிக்கை அல்லத துகள் போன்றதொரு புதிய துணிக்கை இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்ணுன்றமை அறிவியல் உலகில் ஒரு மைல்கல்லாகும். இந்தக் கண்டுபிடிப்பானது எமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லையானாலும் பிரபபஞ்சத்தைத் தீர்õனிக்கும் இந்த உப அணு உலகு பற்றி விளங்கிக் கொள்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமானதொன்றாக அமைகிறது.
ஆனால், ஹிக்ஸ் போசன் போன்ற தொன்றை கண்டுபிடித்திருப்பதாக பௌதிக விஞ்ஞானிகள் இப்போது அறிவித்திருப்பதானது பிரபஞ்சம் தொடர்பான சகல கேள்விகளுக்கும் இதன் மூலம் பதில் கிடைத்துவிடும் என்று சாதாரணம மக்கள் கருதுவதற்கும் சில சமயம் வழிவகுத்துவிடக்கூடும். ஆனால், பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுகள், பரிசோதனைகள், உறுதிப்படுத்துதல், கோட்பாடுகள் என்பன வற்றுக்கான “ஆரம்பமாகவே’ இக்கண்டு பிடிப்பு அமைந்திருக்கின்றது என்பது பற்றி உலகிற்கு விளங்கப்படுத்துவதற்கான கடும் பிரயத்தனத்தில் இப்போது விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கின்றனர். புதிய துணிக்கை அல்லது துகளின் திரட்சி பற்றி விஞ்ஞானிகள் இப்போது அறிந்துகொண்டுள்ளனர். ஆனால், இந்த அணுத் துகள்ளின் திரட்சியானது முழுச் செறிவுள்ள மின் ஏற்றத்தைக் கொண்டுள்ளதா என்பது பற்றி அவர்களுக்கு இதுவரை தெரியாது. அத்துடன் இலத்திரன் போன்று இது அடிப்படையான துணிக்கையா அல்லது இது வேறு துகள்களைக் கொண்டிருக்கின்றதா? என்பது குறித்தும் இதுவரை அவர்கள் அறியத்தரவில்லை. மேலும் சடப்பொருளினதும் பிரபஞ்சத்தினதும் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான கோட்பாடுகள் குறித்து முன்னரிலும் பார்க்க உறுதிப்படுத்த வேண்டிய அல்லுத நிராகரிக்க வேண்டியது பணியை திட்டவட்டமான முறையில் ஆரம்பிக்க வேண்டிய கடப்பாடும் விஞ்ஞானிகளின் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. சடப் பொருளின் அடிப்படைக் கூட்டமைப்பு தொடர்பாக விபரிக்கும் முன்மாதிரியாக இன்று நாம் கொண்டிருப்பது பௌதிகத்தின் தர முன்மாதிரிப் பெறுமானத்தையேயாகும். வேறு இதரதுகள்கள் இல்லாத அடிப்படைத் துணிக்கையாக இந்தப் புதிய துணிக்கை அமைந்திருந்தால் அதாவது ஹக்ஸ் போசனாக அது இருக்குமானால் பௌதிகவியலின தர முன்மாதிரிப் பெறுமானத்தைக் கொண்டுள்ளதா என்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதே÷வைள வேண்டம், ஒத்த அணுக்கூறுகளின் சுழற்சி இயக்க ஆரம்பகட்டம், மேலதிக பரிமானங்கள் போன்ற மர்மங்களுக்கு தீர்வு காண வேண்டிய நிலமை பௌதிகவியலாளருக்க தொடர்ந்தும் காணப்படுகிறது என்ற மாற்றுக் கருத்துகளும் விஞ்ஞானிகளின் மற்றொரு பிரிவினரால் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
எது எவ்வாறாக இருப்பினும் பிரபஞ்சம் தொடர்பான எமது புரிந்துணர்வுக்கு இந்த கடவுளின் துணிக்கை அல்லது ஹிக்ஸ் போசன் முக்கியமான விடயமாகும். சாதாரண நபருக்கு அதாவது சிறுபிள்ளையொருவர் இது குறித்து கேட்டால் எவ்வாறு விளக்கமளிப்பது என்பது இங்கு முக்கியமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக நீங்கள் எவருடன் கதைக்கிறார்கள் என்பதே இங்கு முக்கியம்.
சாதாரண நபர்கள், பிள்ளைகள், உயர்தர வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மத அடிப்படைவாதிகள் எனப் பல தரப்பட்டோர் இந்த ஹிக்ஸ் போசன் தொடர்பாக அறிந்துகொள்ள விரும்புவதுடன் மாற்றுக்கருத்துகளையும் கொண்டிருப்பர். இது பற்றி பொதுவாக கூற விரும்பினால், “ஹிக்ஸ் போசன் என்பது கெட்டியானதாகவும் தளர்வுத்தன்மை கொண்டதுமாக ஆரம்பத்தில் இருக்கும் துணிக்கையெனவும் 1962 இலேயே இது உண்மைய்õக உள்ளதென்ற கருத்து முன்வைக்கப்பட்டதெனவும் அதேசமயம் பௌதிக சக்தியின் பிரிக்க முடியாத துகள் என்றும் கூற முடியும். மேலும் ஒத்த கூறுகள் இயற்கையாகவே பலவீனமடையும் போது அவை எவ்வாறு உடைகின்றன என்பதை இந்த ஹக்ஸ் போசன் விளக்குகிறது எனினும் கூற முடியும்.
பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான நான்கு சக்திகள் ஒன்று சேர்ந்திருப்பதே காரணம் என்பது கோட்பாடாகும். வலுவான அணுச்சக்தி, வலுவற்ற அணுச்சக்தி மின்காந்த சக்தி, இயல் ஈர்ப்பாற்றல் ஆகிய நான்கு அடிப்படைச் சக்திகளால் ஒன்றுபட்டு பின்னர் உடைந்ததால் பிரபஞ்சம் தோன்றியது என்பது கோட்பாடு இப்போத இந்த ஹிக்ஸ் போசன் அல்லது கடவுளின் துணிக்கை பற்றி கண்டு பிடிப்பானது பிரபஞ்சம் தொடர்பாக இதுவரை காலமும் நிலை நிறுத்தப்பட்டிருந்த கோட்பாட்டிற்கு அப்பால் புதிய கண்டுபிடிப்புகளுக்க வழிசமைத்திருக்கிறது என்பதே உலகின் பல நாடுகளையும் சேர்ந்த பௌதிக வியலாளர்களின் கருத்தாகும். இங்கு மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது மத அடிப்படைவாதிகளின் நிலைப்பாடு ஹிக்ஸ் போசன் என்று ஒன்றுமே இல்லை என்பதாகும்.

Kirush Shoban

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *