ஹலுஸ்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நியூஸ்டார் என்ற பெயரில் அழைக்கப்படும் தொலைநோக்கி ஒன்றை ஆய்விற்காக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைநோக்கி ஆளில்லா விண்கலமான பெகாசஸ் எக்ஸ்.எல். உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. மார்ஷல் தீவில் இருந்து பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் விண்கலத்திலிருந்து தொலைநோக்கி விடுபட்டு தனது சுற்று வட்ட பாதையில் இணைந்தது.
தனது பணயின் முதற்கட்டமாக விண்வெளி குறித்து ஆய்வு செய்து அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது குறித்து வானியலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றது. பின்னர் நட்சத்திர கூட்டங்கள், சூப்பர்நோவா மற்றும் விண்வெளியில் ஆச்சரியங்களான கருந்துளைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகின்றன.