1. மாலையில் வெளியில் சென்றுவிட்டோ அல்லது அலுவலகத்திலிருந்தோ வீடு திரும்பியதும் தேனை எடுத்து முகத்திலும் கைகளிலும் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்தபின் முகம் வெளுக்கும் .ஒரு மாதத்திலேயே தெரிய ஆரம்பிக்கும்.
2. பற்களின் மஞ்சள் நிறம் மறைந்து பளபளக்க வேண்டுமானால் , கொஞ்சம் உப்பையும் , எலுமிச்சைச் சாறையும் கலந்து பற்களின் மீது துலக்குவதுபோல் தேய்த்து வந்தால், பற்களின் பழுப்பு நிறம் நீங்கி முத்துப்போல் பிரகாசிக்கும்.
3. சிலருக்கு புருவங்கள் தேவையான அளவு அடர்த்தியாக இருக்காது. இருக்கும் இடமே தெரியாமல் மிக மிக மெல்லிசாக இருக்கும். அவர்கள் படுக்கப் போகுமுன் கொஞ்சம் விளக்கெண்ணெயும் தேங்காயெண்ணெயும் சேர்த்து தடவி வந்தால் “புருவம் நன்கு வளரும்.
4. உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க உதடுகளில் லேசாக வெண்ணெய் தடவி வந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இதுவும் அவசியம்தான். ஆனால், இதுமட்டும் போதாது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குடல் குளிர்ந்தால் இந்தமாதிரி வெடிப்புகள் உதடுகளில் ஏற்படாது. இது தவிர கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் வெந்தயம்-வெண்ணெய் ட்ரீட்மெண்ட்டை தினமும், ஒரு வாரம் செய்து வந்தால், நல்ல குணம் தெரியும்.

வவுனியாவிலிந்த்து
துசி குமாரசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *