சந்திரனின் மிகப்பெரிய தோற்றத்தை இன்று சனிக்கிழமை இரவு நேரடியாகப் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருவதால் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
சூரியனை மையமாகக் கொண்ட பால்வெளி மண்டல கோள்கள் அனைத்தும் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகின்றன. இவற்றில் பூமியையும் சேர்த்து சுற்றும் ஒரே கோள் சந்திரன் மட்டுமே.
பூமியிலிருந்து சந்திரனுக்கான சுற்றுவட்டப் பாதையின் தூரம் 4,06,349 கிலோமீற்றர் ஆகும்.
ஆனால் இன்று சந்திரனின் சுற்று வட்டப்பாதை பூமிக்கு மிக அருகில் அமைந்து இருகோள்களுக்கும் இடையே உள்ள தூரம் 3,56,955 கிலோமீற்றராகக் குறைகிறது.
எனவே இன்று இரவு 9 மணியிலிருந்து வழமையான சந்திரனை விட அதன் உருவம் 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசம் அதிகமாகவும் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த விசேட சந்திரனுக்கு ‘அண்மைநிலை சந்திரன்’ (பெரிஜி மூன்) என நாசா பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சதீஸ்குமார் கிரிஜா
மட்டக்களப்பு