இணையத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பினால் நீங்கள் இணையத்தை புதிதாக பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது இணைய ஏமாற்றுதல்களை பற்றி அறியாமல் இருந்திருக்க வேண்டும்.

இணையத்தில் மோசடிக்காகவும், நண்பர்களுக்குள் விளையாடி கொள்ளவும் இது போன்ற புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் நாம் நண்பர்களுடன் விளையாடி கொள்ளும்படி இணையத்தில் நண்பர்கள் குமிழும் ஒரு இடமாக பேஸ்புக் தளத்தில் போலியான பேஸ்புக் the Wall Message உருவாக்கலாம்.

இதற்கு ஒரு இணையதளம் உள்ளது. முதலில் இந்த the wall machine லிங்கில் சென்று அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

அதிலுள்ள f Connect என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Allow பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

அந்த விண்டோவில் உங்களுக்கு தேவையான படி அதை எடிட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான புகைப்படத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

புகைப்படத்தை தேர்வு செய்யும் பொழுது கூகுள் மூலம் தேடி பெரும் வசதியும், உங்களின் பேஸ்புக் நண்பர்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் கொடுத்து இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *